Science teaches us that for every action there is an equal and opposite reaction. While we know this applies to the physical realm, we often forget that it also applies to the emotional realm. I was reminded of this recently when I found a copy of the poem entitled, The Laws of Life. It contains 15 truths about cause & effect relationship, each of them valuable to molding a better me and a better you.
The more generous we are, the more joyous we become,
The more enthusiastic we are, the more valuable we become,
The more interested we are , the more alive we become,
The more caring we are, the more radiant we become,
The more serving we are, the more prosperous we become,
The more outgoing we are, the more helpful we become,
The more persistent we are , the more successful we become,
The more grateful we are , the more godly we become,
The more forgiving we are, the freer we become,
The more prayerful we are, the more blessed we become,
The more curious we are, the more creative we become,
The more trusting we are, the wiser we become,
The more patient we are, the more responsive we become,
The more considerate we are , the more peaceful we become,
The more cheerful we are, the more attractive we become,
This great poem reminds us that we're each in change of ourselves and points out specific ways we can become a better person- If we want to. It also tells us what the rewards will be for living in this way. If we plant the seeds , we will reap the harvest.
Friday, 27 March 2015
Monday, 26 January 2015
மன அமைதி பெற வழி 9
9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.
மன அமைதி பெற வழி 8
8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.
மன அமைதியை பெற வழி 7
7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.
மன அமைதி பெற வழி 6
6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.
மன அமைதி பெற வழி 5
5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.
மன அமைதி பெற வழி 4
4. பொறாமை கொள்ளாதீர்!
வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்
மன அமைதி பெற வழி 3
3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.
மன அமைதி பெற வழி
2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.
மன அமைதி பெற வழி 1
1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!
Sunday, 25 January 2015
தனிமை வரமா? சாபமா?
நீங்கள் எங்கேயாவது விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் எந்த விதமான இடத்தை தேர்ந்தெடுப்பீர்கள் ? எங்கும் மக்கள் நிறைந்திருக்கும் ஒரு இடமா, இல்லை இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு இடமா ? பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது ஒரு அமைதியான இடம், இல்லையா ?! அப்போது, நாம் இருக்கும் நகரம் ஒரு இரைச்சல்களின் பெட்டகம் ஆகி விட்டது எனும்போது அந்த தனிமை, அமைதி தேவை படுகிறது இல்லையா ? என்னையும், என் குடும்பம், இயற்கையையும் தவிர யாரும் இருக்க கூடாது என்றுதான் எல்லோரும் யோசிப்பார்கள் ஒரு விடுமுறைக்கு. இயற்கையும், நாமும் என்று அந்த அமைதியை, தனிமையை விரும்பி தேடி செல்வோம்.... அதே போல்தான் நானும் ஒரு விடுமுறைக்கு ஒரு அமைதியான இடம் சென்றிருந்தேன், ஆனால் அந்த அமைதி ஒரு மிக பெரிய கேள்விக்கு வித்திட்டது, அது என் எண்ணத்தை மாற்றியது என்றால் என்ன செய்வது ?!
தனிமை என்பது எல்லா மனிதனுக்கும் தேவை, அது நமக்குள் கேள்விகளை கிளப்பிவிடும், எங்கும் எப்போதும் நாம் தேடுவது தனிமைதான் இல்லையா ?. சில நேரங்களில் நாம் நமது குடும்பத்தினரை விட்டும் கூட தனிமை தேடுவோம், நமது வீட்டினுள்ளே ஒரு இடம் தனியாக அமர்ந்து சிந்திப்பதற்கு வேண்டும், அங்கு சென்று அமர்ந்து கண்ணை மூடிக்கொள்ள தோன்றும் அப்படித்தானே ? நகரத்தின் இரைச்சலில் எப்போதும் நம் காதுக்குள் எப்போதும் ஒரு வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி நாம் நினைப்பது ஒன்றும் அதிசயமில்லை. எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதான் இல்லையா, ஆனால், நினைத்து பார்த்திருக்கிறோமா ஒரு சில வேலைகள் செய்பவர்கள் தனிமையில்தான் தங்களின் பெரும் பொழுதை கழிப்பதை.... அவர்களுக்கு அந்த தனிமை இனிமையா, கொடுமையா என்று?
திண்டுக்கல்லில் சிறுமலை என்று ஒரு இடம் உண்டு, அந்த மலையின் மேலே நிறைய எஸ்டேட் உண்டு, ஆனால் அது பாதுகாக்கபட்ட வனபகுதி. இங்கு நீங்கள் செல்லும்போது ஒரு செக் போஸ்ட் உண்டு. அங்கு ஒரே ஒரு காவலர் மட்டுமே, இரவு பகல் என்று காவல் காப்பார். பொதுவாக இந்த மலை பகுதிக்கு யாரும் வருவதில்லை ஆதலால் அவருக்கும் வேலை இல்லை. அவரும், இயற்கையும் மட்டும்தான்.....நினைத்து பாருங்கள் சுற்றிலும் மரங்கள், பறவை ஒலி மட்டும்தான், தூரத்தில் ஒரு சிறு ஓடை ஓடுகிறது, பச்சை பசேல், குளுமை..... என்ன ஒரு அழகான இடம், அருமையான தனிமை, நிம்மதியான அமைதி, இல்லையா ? இதை ரசித்து அவரிடம் சொன்ன போதுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு தூரம் இரைச்சலை தேடுகிறார் என்பது ! காலை முதல் மாலை வரை ஒரு சிறு இடத்தில் இருக்கும் அவருக்கு இந்த அமைதி ஒரு கொடுமை, நமக்கெல்லாம் இந்த நகர வாழ்கையில் இந்த இரைச்சல் ஒரு கொடுமை...... இப்போது சொல்லுங்கள் அமைதி, தனிமை என்பது எல்லோருக்கும் இன்பமா என்ன ?
காட்டில் செக் போஸ்டில் இருக்கும் ஆள், பணக்கார பங்களாவை காவல் காக்கும் வாட்ச் மேன், இரவில் ரோந்து சுற்றி ஓய்வெடுக்கும் போலீஸ்காரர், எஸ்டேட் பங்களாவை காவல் காக்கும் ஆள், தோட்டத்தை காவல் காக்கும் விவசாயிகள், இரவினில் லாட்ஜ் முன்னே உட்கார்ந்திருக்கும் ரிசப்ஷன் ஆள், மரத்தடியில் வண்டியை போட்டு விட்டு பயணி திரும்பி வர காத்திருக்கும் டிரைவர், வெளிநாடுகளில் குடும்பத்தை பார்க்க முடியாமல் தவித்திருக்கும் சகோதரர்கள், நெடுஞ்சாலைகளில் புகழ் தொலைத்த டீ கடைகள், நமது தேசத்தை காக்க எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், எத்தனையோ முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்கள், வேலைக்கு போகும் பெற்றோர் திரும்பி வர காத்திருக்கும் குழந்தைகள், ஆளில்லா ரோட்டில் காத்திருக்கும் கடைக்காரர்கள், ஏழை வீட்டில் நோய் வாய்ப்பட்டு நகர முடியாமல் இருக்கும் நோயாளிகள், ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு முன் கண்விழிக்க காத்திருக்கும் சொந்தங்கள், கிராமத்து போஸ்ட் ஆபிசில் தபாலுக்காக காத்திருக்கும் போஸ்ட் மேன் என்று நாம் சந்திக்கும் இது போன்ற மனிதர்கள் எல்லாம் தனிமையை தினமும் அனுபவிக்கும், அவர்களுக்கு எல்லாம் தனிமை உற்சாகம் ஊட்டுமா என்ன ?
ஒரு தனிமையின் இனிமை தெரிய நாம் பணம் கொடுத்து அதை தேடி செல்கிறோம், ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த அமைதி வேண்டாம் என்று சிலர் இருப்பது வாழ்வின் முரண் இல்லாமல் வேறென்ன ? நான் இதுவரை இது போன்ற இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் என்னை எதிர்பட்டவர்களிடம் ஒரு புன்னகை மட்டுமே சிந்தி இருக்கிறேன். இன்னும் சொல்வதென்றால், நான் கூர்க் மலை பகுதி சென்றிருந்தபோது, நாங்கள் ஒரு எஸ்டேட்டில் தங்கி இருந்தோம். நான் அங்கு எங்களுக்கு புன்னகையுடன் பணிவிடை செய்த அந்த வயதான மூதாட்டிக்கு தினமும் ஒரு சிரிப்பை செலவு செய்தேனே அன்றி, வார்த்தைகளை அல்ல. இன்று நினைத்து பார்த்தால், அட ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இது போன்ற நிமிடங்களில்தான் எனக்கு தோன்றும்...... சில நேரம் தனிமையை, அமைதியை கொல்வது என்பது பாவமில்லை என்று !?
Happy Republic Day Jai Hind Spromeo.blogspot.com
There is no need for you to become despondent over your failures. What is relevant is that you should learn the right lessons from them. That is how every failure becomes a lesson towards progress. No failure could be considered as an indication of impossibility. If you look at failure from the right perspective, that itself may become a driving force for you to act further. I have seen same people who begin a thing with all enthusiasm but do not persist in their effort to complete it . They don't have the patience and lack the quality of perseverance. They want results immediately. They are greedy to reap immediately they have sown. In their impatience they will hop from one jump to another leaving everything in the middle. The reason they give is that they could not get along in the work they were previously doing . People with such temperament will remain non-achievers to the very end
Subscribe to:
Comments (Atom)